ராணிப்பேட்டை அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள பணிமனையில் வருகின்ற மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணி முதல் பகல் 1.45 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் சென்னை -பெங்களூரு, சென்னை -திருப்பதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் அந்த இரண்டு நாட்களும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை மற்றும் அரக்கோணம் காட்பாடி என இரண்டு மார்க்கத்திலும் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12610) சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.
இந்த ரயில்கள் எதுவும் சென்னை சென்ட்ரல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப்போலவே ஜார்கண்ட் மாநிலம் கான்பூரில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய ரயில் ரேணிகுண்டா மற்றும் திருத்தணி வழியாக செல்லும் என்றும் பெரம்பூர் செல்லாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை பராமரிப்பு பணிகளுக்காக வருகின்ற 4 வாரங்களில் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களும் இந்த திட்டத்தை பின்பற்றப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.