Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இரட்டை ரயில் பாதை பணி நடைபெற உள்ளதால் சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி நாகர்கோவில் பகுதியில் இரட்டைப் பாதை பணிகள் நடைபெற உள்ளதால் இந்த தடத்தில் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்படுகிறது. மதுரை மற்றும் புனலூர் விரைவு ரயில் வருகின்ற செப்டம்பர் 26 மற்றும் 29 ஆகிய தேதிகள்,புனலூர் மற்றும் மதுரை விரைவு ரயில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

கர்நாடக மாநிலம் மங்களூர் மற்றும் நாகர்கோவில் விரைவு ரயில் வருகின்ற 26, 29 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.அதனைப் போலவே நாகர்கோவில் மற்றும் மங்களூர் விரைவு ரயில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் இடத்திற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |