Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. இனி இந்த ரயில்கள் தாமதமாக தான் இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

குறிப்பிட்ட பாதையில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மானாமதுரை-சூடியூர்,சங்கரன்கோவில் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரை மற்றும் விழுப்புரம் ரயில் 17 முதல் 22 வரையிலும், 26 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.

அதனைப் போலவே ராமேஸ்வரம் மற்றும் மதுரை விரைவு ரயில் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும்,அக்டோபர் 26 முதல் 31ம் தேதி வரையிலும் ராமேஸ்வரத்திலிருந்து 2:30 மணி நேரம் தாமதமாக புறப்படும். மேலும் மதுரை மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரயில் வருகின்ற 17ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையும், 26 முதல் 31ஆம் தேதி வரையும் மதுரையிலிருந்து 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |