IRCTC மூலமாக ரயில்வே டிக்கெட் முன் பதிவு செய்வோருக்கு ரயில்வே துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது IRCTC மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தங்கள் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும் என அறிவித்துள்ளது. மற்றபடி சாதாரண முறையில் ரயில்வே டிக்கெட் முன் பதிவு செய்வோருக்கு எந்த விதிமுறைகளும் இல்லை.
IRCTC மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் யூசர் ஐடி, பாஸ்வர்டு கொடுத்து லாகின் செய்வது வழக்கம். இதனைத் தொடர்ந்து கேப்ட்சா குறியீட்டையும் பதிவிட வேண்டும் . கொரோனா தொற்றுக்குப் பிறகு மீண்டும் டிக்கெட் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் புதிய பாஸ்வர்டை உருவாக்க, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை இனி வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கிற்க்கு பின்னர் செயலிழந்த கணக்குகளை உறுதிப்படுத்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் சரி பார்த்துக் கொள்வதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது.