Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரோட்டா மாஸ்டர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு வாட்ஸ்அப் நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் நான் ஒரு மனித வெடிகுண்டு. திருச்சி
ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப் போகிறேன். முடிந்தால் காப்பாற்று என குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு சில ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்று இருந்தது. இந்த குறுஞ்செய்தி கடந்த 23-ஆம் தேதி வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தி அனுப்பியவரை கண்டு பிடிக்குமாறு கமிஷனர் கே‌.கே நகர் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பேருந்து நடத்துனராக பணிபுரியும் தேவராஜ் என்பவர் குறுஞ்செய்தியை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் தேவராஜிடம் விசாரணை நடத்தியதில், தான் அவ்வாறு செய்யவில்லை எனவும், என்னை போன்று யாரோ பல்வேறு இடங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருவதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு சைபர் கிரைம் காவல்நிலையத்தில் தான் அளித்த புகார் பற்றியும் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தேவராஜின் பக்கத்து வீட்டுக் காரரான செல்வராஜ் என்பவர் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது. இவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தேவராஜுக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்ததால், அதற்கு பழி வாங்குவதற்காக ஒரு சிம் கார்டில் தேவராஜ் பெயர் போன்ற ஐடியை மாற்றிக்கொண்டு அவர் அனுப்புவது போன்று மெசேஜ் அனுப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்ததால், காவல்துறையினர் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Categories

Tech |