Categories
மாநில செய்திகள்

ரயில்வே நிர்வாகம் திடீர் அறிவிப்பு… மீண்டும் இயங்கும் ரயில் சேவை… பயணிகள் மகிழ்ச்சி…!!!

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை செல்லும் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ்  ரயில் மீண்டும் இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மும்பை இடையே ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில்  இயக்கப்பட்டு கொண்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு கேரளா பயணிகளுக்கும் இந்த ரயில் போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் ரயில்வே கால அட்டவணை மாற்றத்தின் காரணமாக இந்த ரயில் திடீரென புனேவுடன்  நிறுத்தப்பட்டுள்ளது. இதை அறிந்த ரயில் பயணிகள் கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

கொரோனா காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டு மீண்டும் சில மாதங்களுக்கு பின் படிப்படியாக ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட போதிலும் கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படாமல் இருந்து வந்தது. அதனால் இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு வந்தது. இதனைக் கருத்தில் கொண்ட கன்னியாகுமரி பூனே  ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதன்படி வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் இந்த ரயில் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்குவது உறுதி  செய்யப்பட்டுள்ளது. வருகிற 31-ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து மறுநாள் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து பூனேவில் இருந்து புறப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து தினமும் காலை 8.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மீண்டும் மறுநாள் இரவு 10 மணிக்கு பூனே  ரயில் நிலையத்தை சென்றடையும்.  ரயில் நிலையத்திலிருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மூன்றாவது நாள் பிற்பகல் 12 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |