ரயில்வே துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ஆண்டுக்கு 2 முறை டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்கி வருகிறது. இந்நிலையில் நகர்ப்புறத் துறை, அரை நகர்ப்புறத் துறை அல்லது கிராமப்புறத் துறையில் வேலை செய்வதை பொறுத்து, அனைத்துப் பணியாளர்களுக்கும் DAவானது மாறுபடுகிறது. இவ்வாறு சமீபத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி 345 ஆக அறிவித்துள்ளது.
ஆனால் இந்த அறிவியப்பானது மத்திய அரசின் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தாது. மேலும் அரசின் ரயில்வே துறை மற்றும் பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு என்று அந்தந்த துறைகளின் சார்பில் தனியாக அறிக்கைகள் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
அந்த வகையில் ரயில்வே துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி, DA 3% உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பள உயர்வு ஜனவரி1, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட்டு விடும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அனைத்து மண்டலங்களுக்கும், ரயில்வே வாரிய துணை இயக்குநர் ஜெய் குமார் இதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளார். அத்துடன் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையிலான நிலுவை தொகையுடன் சேர்த்து வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.