Categories
மாநில செய்திகள்

ரயில்வே துறையில் அறிமுகமாகும் அசத்தலான திட்டங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரயில் பாதையை துல்லியமாக ஆய்வு செய்தல், புறநகர் ரயில் போக்குவரத்தின் போது விபத்து ஏற்படாமல் ரயில்களை இயக்குவது, ரயில் பாதை தாங்குதிறனை கண்டுபிடித்தல், ரயில் பாதை விரிசலை கண்டுபிடித்தல் போன்றவற்றிற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். இதனையடுத்து ரயில்வே துறைகளுக்கு தேவையான செயலிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு புதிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார். இதற்கான முழு விவரங்களை www.innovation.indiyanrailways.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம். அதன்பிறகு மதுரை-தேனி பகுதியில் போடிநாயக்கனூர் பகுதி வரை ரயில்வே பணிகள் முடிவடைந்தவுடன் புதிய ரயில்கள் இயக்கப்படும்.

இந்நிலையில் ரயில்வே பயணிகளின் வசதிக்காக ரயில்களை இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இடை நிறுத்தம் செய்யக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு ரயில்  நிலையங்களில் நடைமேடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், மேற்கூரை அமைத்தல், எல்இடி விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் பயணிகளின் வசதிக்காக செய்யப்படுகிறது என்றார். அதன்பிறகு கோயம்புத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் போதிய இடவசதி இல்லாததால் ரயில்வே பணிகளை விரிவாக்கம் செய்ய முடியவில்லை எனவும், மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிக்காண ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது எனவும்,‌ ஒப்பந்தக்காரர்களுடன் ஜூன் 17-ம் தேதி நேர்காணல் நடைபெற இருக்கிறது எனவும் கூறினார்.

Categories

Tech |