இந்தியாவில் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போன அறிவித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அறிவித்துள்ளார்.
அதிகபட்ச வரம்பாக 17951 ரூபாய் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இந்த ஊழியர்களுக்கு மொத்த போனஸ் 1,832 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.