தென் மாவட்ட ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதனை இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஒரு சில ரயில் நிலையங்களில் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 1ஆம் தேதி முதல் தென்மாவட்ட ரயில் போக்குவரத்து நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில் மதுரை-கொல்லம், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் -நாகர்கோவில், மதுரை- புனலூர், கன்னியாகுமரி- ராமேஸ்வரம், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, கோவை- நாகர்கோவில் நள்ளிரவு எக்ஸ்பிரஸ், கோவை- நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ், மதுரை- திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ், பெங்களூர்- நாகர்கோவில், கன்னியாகுமரி- சென்னை, குருவாயூர்- சென்னை, சென்னை- கொல்லம், நாகர்கோவில்- மும்பை, கன்னியாகுமரி- நிஜாமுதீன், கன்னியாகுமரி-ஹவுரா போன்ற ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் புறப்படும் நேரத்திலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த மாற்றத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் 139 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.