வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை மறுதினம் புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் சில ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி நாகர்கோவில் – ஷாலிமார், ஹவுரா- கன்னியாகுமரி, ஹவுரா -சென்னை சென்ட்ரல், எர்ணாகுளம் -பாட்னா, திருச்சி – ஹவுரா, சந்திரக்காச்சி-சென்ட்ரல், தாம்பரம்-நியூ தின்சுகியா, தாம்பரம்-ஜஸித், சென்ட்ரல்-நியூ ஜபுல்புரி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.