Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு…. ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பு…!!!!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை இணைப்பது குறித்து ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா  பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் ரயில்களில் முன்பதிவு இல்லா  பெட்டிகளை இணைப்பது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள தடங்களில் இயங்கும் ரயிகல்ளில், கொரோனோவுக்கு முந்தைய காலத்தில் இருந்தது போல பொது பெட்டிகளை இணைக்கலாம்.  அதில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்கலாம்.

மேலும் தற்போது இயக்கப்படும் விடுமுறைக்கால சிறப்பு ரயில்களிலும் தேவைக்கு ஏற்ப இதேபோல் போது பெட்டிகளை இணைக்கலாம் எனவும்  கூறப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் இந்த அறிவிப்பு குறித்து உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில்,  “உதாரணமாக ஒரு ரயிலில் கொரோனோவுக்கு  முந்தைய காலத்தில் நான்கு முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகள் இருந்திருந்தால், அவை இப்போது 2 s முன்பதிவு  பெட்டிகளாக  இயக்கப்பட்டு வருகிறது, எனவும் இந்த பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளில் இருந்து முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றப்படும்.

மேலும் கொரோனோவுக்கு  முந்திய காலத்தில் இருந்த முன்பதிவு பெட்டிகளும் அதே எண்ணிக்கையில் தொடரும். இது தற்போது இயங்கும் வழக்கமான ரயில்களும் பொருந்தும். விடுமுறைக்கால சிறப்பு ரயில்களுக்கும் பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |