தேனியில் இருந்து மதுரைக்கு பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து மதுரை வரையிலான அகல ரயில் பாதை திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது அதற்கான சோதனை ஓட்டமும் நடந்து முடிந்துள்ளது. எனவே இந்த ரயில் பாதையில் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ் பெருமாள் தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி பெரியகுளம் சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து நுதன முறையில் போராடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.