Categories
தேசிய செய்திகள்

ரயிலில் பயணம் செய்யும்போது…. இது கட்டாயம் தேவையா…? பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

லட்சகணக்கான மக்கள் தினமும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும், தினசரி வேலை, கல்வி, சுற்றுலா ஆகிய பல்வேறு காரணத்திற்கும் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற போக்குவரத்து வசதிகளை விட ரயில் பயணத்தில் மலிவான கட்டணம், வசதியான பயணம் போன்ற அம்சம் இருப்பதால் இதனை தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு ரயிலில் டிக்கெட் புக் செய்தும் பயணம் செய்யும்போது நிறைய பேர் இந்த பிரச்சினையை சந்தித்திருப்பார்கள் அதாவது டிடிஆர் செக்கிங் வரும்போது ஆதார் கார்டு சரிபார்ப்பு செய்யப்படும். ஆனால் ஒரு சிலர் ஆதார் கார்டு எடுத்துச் செல்ல மறந்து விடுகிறார்கள். இதனால் அபராதம் போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

உண்மையில் ஆதார் கார்டு கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டுமா? ஆதார் இல்லாமல் ரயில் பயணம் மேற்கொள்ள முடியாதா? ரயில்வே விதிமுறை என்ன? என்பது குறித்து கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஐஆர்சிடிசி விதிமுறைப்படி ரயில் பயணிகள் 12 வகையான அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லலாம். அதில் ஆதார் கார்டும் ஒன்று அவ்வளவுதான். ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே ரயிலில் செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது.

ஆதார் இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அதற்கு பதிலாக பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டை, மாணவர் அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி பாஸ்புக், புகைப்படம் அடங்கிய ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கையில் வைத்திருந்தாலும் போதுமானது. டிஜிட்டல் ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சில சமயம் வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவில் உள்ள ரயில்களில் பயணம் செய்யும்போது இந்த ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இருக்காது. எனவே அவர்கள் தங்களுடைய சொந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தால் போதும். அந்த ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படும்.

Categories

Tech |