Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரம்மி விளையாட்டிற்கு அடிமை…. டிவி ஆபரேட்டர் செய்த வேலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

டிவி ஆபரேட்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகநத்தம் கிராமத்தில் கேபிள் டிவி ஆபரேட்டரான குமாரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமாரவேலுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு பணத்தை ரம்மி விளையாட்டில் இழந்துவிட்டார். ஆனாலும் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான குமரவேலு பலரிடம் இருந்து கடனாக பணம் வாங்கி விளையாடியுள்ளார். இதில் 4 லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்துவிட்டார். கடைசியாக தன்னிடம் இருந்த நகையை 12 ஆயிரம் ரூபாய்க்கு கடையில் அடகு வைத்து ரம்மி விளையாடியுள்ளார்.

அதிலும் குமாரவேலு பணத்தை இழந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த குமாரவேலு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் சுடுகாட்டு பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமாரவேலுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |