வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து ரம்ஜான் பண்டிகைக்காக மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எந்த பண்டிகைகளும் சரியாக கொண்டாட முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைய தொடங்கியிருக்கிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்காளதேசத்தில் தலைநகரான டாக்காவில் வேலை செய்யும் வெளியூரை சேர்ந்த பணியாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக சமீப நாட்களாக டாக்கா நகரிலிருந்து செல்லக்கூடிய ரயில்களில் அதிக மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் ரயில் பெட்டிகளில் இடம் இல்லாமல் சிலர் ரயிலுக்கு மேலே ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். ரயில்கள் மட்டுமன்றி படகுகளிலும் அதிக மக்கள் செல்கின்றனர்.