Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரந்தம்பூர் சென்ற ரன்பீர்- ஆலியா… புத்தாண்டில் நிச்சயதார்த்தமா?… பாலிவுட்டில் பரபரப்பு…!!!

ரன்பீர் கபூரும் ,ஆலியாவும் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள ரந்தம்பூருக்கு சென்றுள்ளதாக வெளியான தகவலால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படம் தோல்வியை தழுவினாலும் இதையடுத்து இவரது சிறப்பான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்தார் . வேக் அப் சித் , ராக்ஸ்டார், பர்ஃபி, ராஜ் நீதி , ஹே ஜவானி ஹை திவானி , சஞ்சு ஆகிய திரைப்படங்களில் அசத்தலாக நடித்து இருந்தார். இவரும் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் நீண்டகாலமாக காதலித்து வருகின்றனர் . இதுவரை ரன்பீர் கபூரும் ஆலியாவும் தங்களை காதலர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில்லை .

Ranbir Kapoor, after revealing marriage plans, takes off with girlfriend Alia  Bhatt and family for a New Year getaway - bollywood - Hindustan Times

இதையடுத்து  சமீபத்தில் பிரபல விமர்சகர் ராஜீவ் மசாந்துடன் நடத்திய உரையாடலில் ரன்பீர் கபூர் வெளிப்படையாக தனது காதலியான ஆலியாவை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் ரந்தம்பூருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர் . அங்கு இருவருக்கும் வருகிற புத்தாண்டில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக பரவிய தகவல் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதுகுறித்து ரன்பீர் கபூரின் மாமா ரந்திர் கபூர் இந்த தகவல் முற்றிலும் வதந்தி . நிச்சயதார்த்தம் செய்வதாக இருந்தால் மாமா நானும் அவர்களுடன் சென்று இருப்பேனே! என்று பரவிய வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .

Categories

Tech |