கூலி தொழிலாளி மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள துப்பாக்குடி இந்திரா காலனி பகுதியில் காளியம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த 15-ஆம் தேதி காட்டுப்பகுதியில் விறகு எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது காதின் கீழ் பகுதியில் காயம் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஈஸ்வரன்(40) என்பவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது ஈஸ்வரன் கூறியதாவது, காளியம்மாள் என்னை தொடர்ந்து அவதூறாக பேசி வந்தார். இதனால் கோபமடைந்த நான் மஞ்சனத்தி கட்டையை எடுத்து அவரது தலையில் அடித்து கொலை செய்தேன் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.