நன்மைகள் நிறைந்த சுவையான கடலைப்பருப்பு சுண்டல்
தேவையான பொருட்கள்
- துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்,
- எலுமிச்சை சாறு – சிறிதளவு,
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 கப்
- வரமிளகாய் – 2
- கருவேப்பிலை – சிறிதளவு
- உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
- பெருஞ்சீரகம் – 1 சிட்டிகை,
- கடுகு – 1 டீஸ்பூன்,
- பச்சை மிளகாய் – 2 (சின்னதாக நறுக்கியது)
செய்யும் முறை
முதலில் கடலை பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பின்பு குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்த கடலைப்பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒன்றிலிருந்து இரண்டு விசில் வரை வைக்க வேண்டும்.
விசில் போனதும் அதனை இறக்கி நீரை வடித்து பருப்பை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய், சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் வரமிளகாய், பச்சை மிளகாய் ,கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்ததாக வடிகட்டிய பருப்பை சேர்த்து நன்கு கிளறி துருவிய தேங்காயை சேர்த்து கிளறி வைக்க வேண்டும்.
இறுதியாக எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி விட்டால் சுவையான கடலைப்பருப்பு சுண்டல் ரெடி.
கடலை பருப்பின் நன்மைகள்
கடலை பருப்பில் இருக்கும் புரதம் மற்றும் நார்ச்சத்தானது, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கால்சியமும், மக்னீசியமும் அடங்கிய கடலைப்பருப்பை சாப்பிடுவதால் எலும்புகள் பலப்படும்.
கடலை பருப்பில் இருக்கும் வைட்டமின் பி மூளையை ஆரோக்கியமாக வைக்கின்றது.
அதிக பொட்டாசியம் நிறைந்த கடலை பருப்பு ரத்த அழுத்தத்தை சீர் செய்ய உதவும்.