Categories
தேசிய செய்திகள்

ரதயாத்திரையை போலீஸ் தடுத்ததால்…. பெரும் பரபரப்பு…!!

ராமர் கோயிலுக்கு நிதி திரட்ட மதுரையில் நடந்து வரும் ரத யாத்திரைக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 5 லட்சத்து 20 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்று ஏற்கனவே விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது ஆரம்பித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் இருந்து 1 கோடி குடும்பங்களை சந்தித்து நிதி திரட்ட இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த நிதி சேகரிப்பு கடந்த ஜனவரி 18ம் தேதி தொடங்கியது. இதில் ஆயிரத்து 500 கோடி கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு நிதி திரட்ட மதுரையில் நடந்து வரும் ராம யாத்திரைக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையரின் உத்தரவை மீறியதாக கூறி அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |