ரஜினியின் 170-வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினி நடிக்கும் 170-வது திரைப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் தளபதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அரவிந்த்சாமி 170-வது திரைப்படத்தில் நடிக்கப் போவதாக வெளியான தகவலில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.