Categories
மாநில செய்திகள்

ரஜினி வேதனையுடன் கடிதம்… கண்ணீர் மல்க வேண்டுகோள்…!!!

 நான் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் நடத்தியது எனக்கு வேதனை அளிக்கிறது என நடிகர் ரஜினி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கடந்த மாதம் அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் “நான் அரசியலுக்கு வராததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது வேதனை தருகிறது” என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் “அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை. தயவு செய்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இது போன்ற போராட்டங்களை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்” என்று கண்ணீருடன் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |