ரஜினி வீட்டில் நடைபெற்ற விசேஷத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றார்கள்.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். முதல் திருமணம் மூலம் வேத் கிருஷ்ணா என்கிற மகன் இருக்கின்றார். இதை தொடர்ந்து அவர் தொழிலதிபர் விசாகன் என்பவரை சென்ற 2019 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சௌந்தர்யா கர்ப்பமாக இருக்கிறார். சௌந்தர்யாவிற்கு விசாகன் வீட்டில் சென்ற வாரம் வளைகாப்பு நடைபெற்றது. மேலும் சௌந்தர்யாவுக்கு வருகின்ற அக்டோபர் மாதம் குழந்தை பிறக்குமாம். இதை அறிந்த ரசிகர்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.