அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கடி ஏதாவது கருத்துக்களை தெரிவிப்பார். சில சமயம் அவர் கூறும் கருத்துக்கள் அதிமுகவுக்குள் சல சலப்பை ஏற்படுத்தும். அதே நேரம் அவர் தல அஜித் ரசிகன் என்பது நமக்கெல்லாம் தெரியும். அஜித்தை பற்றி மிகவும் பெருமையாக உயர்த்தி அவர் பலமுறை பேசியிருக்கிறார். இந்த நிலையில் விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, நடிகர் விஜய் ரஜினிக்கு நிகரானவர் இல்லை. நடிகர் ரஜினிக்கு நிகரானவர் அஜித் தான். ரஜினி மலை, அஜித் தலை என்று கூறினார். இவரது இந்த பேச்சு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
Categories
“ரஜினி மலை… அஜித் தலை”… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அட்டகாச பேட்டி..!!
