ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.
இத்திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்ற ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானது. இதை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இதில் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் கண்ணாடி அணிந்தபடி இருக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஆகஸ்ட் 22-ம் தேதியே பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் செம காஸ்டிங் எனக் கூறி வருகின்றார்கள்.
The cast of #Jailer💥
Welcome on board @meramyakrishnan @iYogiBabu @iamvasanthravi #Vinayakan@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/Umo5DevjWy— Sun Pictures (@sunpictures) August 24, 2022