ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினி உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ரஜினிகாந்த், ஒரு வார காலத்திற்கு முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், ஒருவார காலத்திற்கு ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.