மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அக்கட்சியின் உள்ளாட்சி திட்டங்கள் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை காணொளி மூலமாக சந்தித்து பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், அக்கட்சியின் உள்ளாட்சி செயல்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்களை சந்திப்பில் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளார். அதில் பேசிய அவர், கிராமபுற ஊராட்சிகளுக்கும் நகரப்புற ஊராட்சிகளுக்குமான 7 உறுதிமொழிகள் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில் சீரமைப்போம் என்றால் அனைத்தும் தான். மக்களுக்கு உள்ளாட்சி தொடர்பான புரிதல் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்றார்.
மேலும் மக்களை நோக்கியே என்னுடைய நகர்வுகள் அனைத்தும் உள்ளது என்று கூறிய அவர் என்னுடைய கூட்டணி நல்லவர்களோடு தான் என்று முன்னரே கூறியிருந்தேன். அதாவது அரசியலில் நல்லவர்கள் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் சார்பில் வந்த அன்பை நான் மதிக்கிறேன். இருப்பினும் அவர்களுடன் கூட்டணி தொடர்பாக பேசுவதற்கான நேரம் இதுவல்ல. மேலும் ரஜினி தன் ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம் என்று கூறிய அவரின் குரல் போதுமானது, நாங்கள் மற்ற செயல்பாடுகளை கவனித்து கொள்வோம். கிராமசபை நடக்கிறது என்ற கற்பனை தான் இருக்கிறதே தவிர நிஜமாக மற்றும் முழுமையானதாக அது நடைபெறுவதில்லை. மக்கள் நீதி மையத்தின் இலக்கே தமிழகத்தை சீரமைப்பது தான். எங்களது பயணமும் அதை நோக்கி தான். மாற்றத்திற்க்காக மக்களும் தயாராகியுள்ளனர என்று கூறியுள்ளார்.