Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஜினி குடும்பத்தை எச்சரித்த தனுஷ்”…. கோலிவுட்டில் தீயாய் பரவும் செய்தி…!!!!

ரஜினி குடும்பத்தாரை வாயடைக்க செய்த தனுஷ்.

தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதனைத் தொடர்ந்து தன் மகளை பிரிந்ததால் தனுஷின் மீது கோபம் கொண்ட லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் பட வாய்ப்பு தரவேண்டும் என கூறியதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் தற்போது அதுக்கும் ரஜினி குடும்பத்தார் தொந்தரவு செய்வதாக கூறப்படுகின்றது.

இதனால் கோபமடைந்த தனுஷ் இனிமேல் அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது என முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகின்றது. ரஜினி குடும்பத்திடம் பேசிய தனுஷ் இனியும் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்தால், நான் பிரஸ்மீட் வைத்து அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுவேன். இதை நான் செய்தால் உங்களின் மானம் தான் போகும் என பேசியதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. தனுஷ் இப்படி பேசுவார் என ரஜினி குடும்பத்தார் எதிர்பார்க்கவில்லையாம். ரஜினி குடும்பத்தாருக்கு தனுஷின் இந்த பதில் தக்க பதிலடியாக அமைந்திருக்கின்றது. இச்செய்தியானது கோலிவுட்டில் தீயாய் பரவி வருகின்றது.

Categories

Tech |