ரஜினி,விஜய்யை விமர்சனம் செய்த மீரா மிதுனை ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான மீரா மிதுன் அண்மையில் தமிழ் முன்னணி நடிகை திரிஷாவை விமர்சித்தார். அதில் நடிகை திரிஷா தன்னை காப்பி அடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தவிவகாரம் அடங்குவதற்குள் தமிழில் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த்,விஜயை வம்பு இழுக்கும் வகையில் மீரா செய்துள்ளார்.
இந்த ட்விட்டில் தமிழ்நாடு நாசமாகி கொண்டிருக்கின்றது. நீங்கள் பத்திரமாக இருங்கள் நான் நல்ல இடத்தில் இருக்கின்றேன்,சொகுசான இடத்தில் இருக்கின்றேன்.என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கன்னட ரஜினிகாந்த், கிறிஸ்துவர் விஜய் முயற்சிக்கிறார்கள் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என குமுறியுள்ளார் மீரா மிதுன். இதற்கு ரஜினி விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.