Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஜினியை சந்தித்த சிவகார்த்திகேயன்”… மாஸ் காட்டும் பிக்… இன்ஸ்டா பதிவு…!!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து உள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்ற சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் மனங்களிலும் இடம் பிடித்துள்ளார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வெளியானது. இதற்கு ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு சிவகார்த்திகேயனிடம் படக்குழுவை பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்தை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து உள்ளார். மேலும் சூப்பர் ஸ்டாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, டான் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை சந்தித்தேன் மற்றும் அவரின் ஆசீர்வாதத்தை பெற்றேன். அந்த அறுபது நிமிடங்கள் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவாகும். மேலும் உங்கள் மதிப்புமிக்க நேரத்தை ஒதுக்கியதற்காகவும் டான் திரைப்படத்தை பாராட்டியதற்காகவும் நன்றி தலைவா என கூறியுள்ளார்.

Categories

Tech |