Categories
மாநில செய்திகள்

ரஜினியின் புதிய கட்சி… நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது… ட்விட்டரில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ரஜினிகாந்த் துவங்க இருக்கும் புதிய கட்சிக்கு நிர்வாகிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வரும் 2021 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜனவரியில் தொடங்கயிருக்கும் கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார், என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அர்ஜுனன் மூர்த்தி ரஜினி தொடங்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதால் பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |