ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அனிருத்தின் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்ற தகவல் வெளியாகாமலே இருந்தது. இந்த சூழலில் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் எல்லாம் முடிவடைந்து ஒரு வழியாக படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மிகப் பெரிய ஜெயில் செட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி போன்றோர் நடிப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் ரஜினியின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதாவது 170 ஆவது படத்தை இளம் இயக்குனரான சிபிச் சக்கரவர்த்தி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி தனது முதல் படத்திலே வெற்றியைக் கண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் ரஜினியை இயக்கப் போவதாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிறது. இருப்பினும் இதனை பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.