Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஜினியின் சாதனையையே முறியடித்த விஜய்யின் பீஸ்ட்”…. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

வெளிநாட்டில் ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் பற்றி தான் எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். பெரிய ஹீரோக்களின் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகரிக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் விஜய் திரைப்படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. விஜய் மற்றும் நெல்சன் கூட்டணி இணைய போகின்றார்கள் என்ற தகவல் வந்ததிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்தது.

இந்த படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் அமோகமாக முன்பதிவு நடந்துள்ளது. பொதுவாக ரஜினி திரைப்படம் தான் வெளிநாட்டில் சாதனை படைக்கும். ஆனால் தற்போது அந்த சாதனையை பீஸ்ட் திரைப்படம் முறியடித்துள்ளது. ரஜினியின் படத்தை விட இத்திரைப்படம் முன் பதிவில் சாதனை படைத்தத செய்தியைக் கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |