தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு நீதிபதி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதனால் கிட்டத்தட்ட 26 விசாரணை நடந்துள்ளது.
கடந்த ஆறு மாத காலமாக கொரோனாவால் விசாரணை நடைபெறவில்லை. தற்போது மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது அவர் தூத்துக்குடியில் பேட்டி கொடுத்திருந்தார். அது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதில் ரஜினி ஆஜராகவில்லை. இது தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விலக்கு கேட்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு ஆணையம் முன்பாக ஆணையத்தின் வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்தபோது வரும் ஜனவரி மாதத்திற்குள் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சம்மன் அனுப்பி அவரை விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்