Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினிக்கு கிடைச்சது மகள்களுக்கு கிடைக்காமல் போயிடுச்சே”…. இணையத்தில் பேசி வரும் ரசிகாஸ்….!!!!!

ரஜினிக்கு நடந்தது அவரின் மகள்களுக்கு கிடைக்கவில்லையே என ரசிகர்கள் பேசி வருகின்றார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் இளைய மகள் சௌந்தர்யா. இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் அதற்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் வைத்திருப்பதாகவும் புகைப்படங்களை பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சௌந்தர்யா கர்ப்பமாக இருந்த பொழுது எடுக்கப்பட்ட ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களில் வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் மூத்த மகன் தன் அம்மாவை பார்த்துக் கொண்டது அனைவரையும் கவர்ந்து விட்டது.

மேலும் சௌந்தர்யாவுக்கு பெண் குழந்தை பிறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஐஸ்வர்யாவுக்கும் இரண்டுமே ஆண் குழந்தைகள். இந்த நிலையில் சௌந்தர்யாவுக்கும் இரண்டுமே ஆண் குழந்தைகளாகிவிட்டது. இதை அறிந்த ரசிகர்கள் ரஜினிக்கு ஒரு பேத்தி கூட இல்லையா என்கின்றார்கள். ரஜினிக்கு பெண் குழந்தைகள் பிறந்தது. ஆனால் அவரின் மகள்களுக்கு ஒரு பெண் குழந்தை கூட இல்லாமல் போய்விட்டது. பரவாயில்லை, எந்த குழந்தையாக இருந்தால் என்ன? ஆரோக்கியமாக இருந்தால் சரி என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |