13 வயது சிறுமி மூன்று கொலைகளை செய்த தனது அம்மாவைப் போல் மாறி விடுவாரோ என்று எண்ணி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை இரண்டு பெண்களுக்கு விதிக்கப்பட்டது. ஒருவர் சீரியல் கில்லர் என்று அழைக்கப்படும் ஜோன்ன டென்னேஹி. இவர் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று பேரை படுபயங்கரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு அவர்களின் சடலத்தை ஒவ்வொரு குழியில் வீசி சென்றுள்ளார். 2 பேர் இவரிடம் கத்தியால் குத்தி பின்னர் உயிர் தப்பியுள்ளனர், தனிப்படை அமைக்கப்பட்டு 2014ஆம் ஆண்டு இவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஆயுள் தண்டனை வாங்கி தந்தனர்.
அவரை விசாரித்தபோது கத்தியால் குத்தி கொலை செய்யும் போது எனக்கு ஒரு சந்தோசம் கிடைப்பதாக அவர் கூறினார். இந்த சம்பவம் அனைத்தும் நடக்கும் போது அவருக்கு ஐந்து வயதில் ஈஸியான என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. அவருக்கு தற்போது 13 வயது ஆகிறது .தற்போது தனது தாயை பற்றியும், அவரது கொடூரமான கொலைகளை பற்றியும் தெரிந்து கொண்டுள்ளார். முதலில் தனது அம்மாவை பற்றி கேள்விப்பட்ட போது தரையில் விழுந்து கதறி அழுதுள்ளார் .அவர் முதலில் கேட்ட ஒரே கேள்வி நான் அம்மாவைப் போல் மாறி விடுவேன் என்று தான்.
மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு சில நாட்களாக மனச்சோர்விலிருந்து அவர் ஒரு கட்டத்தில் அம்மாவைப் போல் ஆகி விடுவேன் என்று எண்ணி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது இவருக்கு மனநிலை மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.