Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த… ‘அண்ணாத்த’ படத்தின் ‘வா சாமி’ பாடல் இதோ…!!!

அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற வா சாமி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற ‘வா சாமி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடியான இந்த பாடல் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |