Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே ரெடியாகுங்க… ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ‘சர்வைவர்’… முக்கிய அறிவிப்பு…!!!

அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சர்வைவர்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இது உலகின் மிகவும் பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று. தற்போது தமிழில் உருவாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுவும் கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி போல தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒரு சிறிய தீவில் விடப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் அனைத்தையும் அவர்களே தயார் செய்து கொள்ளவது மற்றும் பல கடுமையான டாஸ்குகள் நிறைந்தது தான் இந்த நிகழ்ச்சி.

https://twitter.com/ZeeTamil/status/1428354448284274703

மேலும் இந்த நிகழ்ச்சியில் வித்யூலேகா, விஜயலட்சுமி, ஜான் விஜய், ஸ்ரீரெட்டி, ஷாலு ஷம்மு உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியின் பெரிய புரோமோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகும் தேதி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |