Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரசாயன பொடி தூவிய வாலிபர்கள்…. பெண்களுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

ரசாயன பொடி தூவி பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரும்புலிக்குறிச்சி, பரணம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக மர்மநபர்கள் ரசாயனப் பொடி தூவி பெண்களிடமிருந்து தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவின் உத்தரவின்படி காவல்துறையினர் ரசாயன பொடி தூவி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் அடிப்படையில் செந்துறை பகுதியில் வசிக்கும் ராஜேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள 17 பவுன் தங்க நகைகள், 60 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |