Categories
உலக செய்திகள்

ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து… 16 பேர் உயிரிழந்த பரிதாபம்… பிரபல நாட்டில் சோக சம்பவம்..!!

பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் சிக்கி உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேரின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் 12 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆனால் நான்கு பேருடைய உடலை அடையாளம் காண்பதற்கு சிரமமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களே இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |