Categories
தேசிய செய்திகள்

ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ… 12 பேர் பலி… பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்…!!!

அகமதாபாத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் கணேஷ் நகர் அருகே ரசாயன கிடங்கு ஒன்று இருக்கிறது. அங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டிட இடிபாடுகளில் இருந்து 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அகமதாபாத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அகமதாபாத்தில் உள்ள ரசாயன கிடங்கில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் மீள வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தேவையான உதவிகளை அதிகாரிகள் அனைவரும் வழங்கி வருகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் அகமதாபாத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி முற்றிலும் முடிவடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |