Categories
தேசிய செய்திகள்

ரங்கோலியில் நீரஜ் சோப்ரா… புதுச்சேரி பெண்ணின் அசத்தல் ஓவியம்… குவியும் பாராட்டு…!!!

ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் உருவத்தை புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரங்கோலி ஓவியமாக தீட்டி உள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக புதுச்சேரி முருங்கப்பாக்கம் அன்னை தெரசா நகரை சேர்ந்த ஓவிய பட்டதாரி அறிவழகி, 29, தன் இல்லத்தில், நீரஜ் சோப்ரா உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார். 12 அடி உயரம், 12 அடி அகலம் உடைய இந்தக் கோலத்தை, பொதுமக்களின் பார்வைக்கு வைத்து, ஒலிம்பிக் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பத்து வகை வண்ணங்களில், 9 கிலோ கோல மாவு கொண்டு, 6 மணி நேரத்தில் இந்த ரங்கோலியை உருவாக்கி உள்ளார்.

Categories

Tech |