ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பெரும் அளவிலான ஆயுதங்களும் வெடிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராணுவத்தின் 19வது பிரிவின் அதிகாரி மேஜா் ஜெனரல் அஜய் சந்த்புரியா பத்திரிகையாளா்களை சந்தித்து கூறியதாவது,
“சென்ற சில வாரங்களாக உரி செக்டாா் ராம்பூா் பகுதியில் அமைந்திருக்கும் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் எல்லை ஊடுருவல்களும் பயங்கரவாதிகளால் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் பதுக்கும் சதிவேலைகளும் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்து.
அதனடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹத்லங்கா நாலா பகுதிகளில் துவங்கிய தேடுதல் வேட்டை 8 மணி நேரம் நீடித்தது. தேடுதல் வேட்டையின் முடிவில் பயங்கரவாதிகளால் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருள்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.