Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

ரகசியமா தடுப்பூசி போட்டு கொண்டாரா….? முன்னாள் அதிபர் பற்றி வெளியான தகவல்….!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் பரவலாக வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா கடந்த ஜனவரி மாதத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபரின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தவித தடுப்பூசி போடப்பட்டது எவ்வளவு டோஸ் எடுத்துக் கொண்டுள்ளனர் என்ற தகவலை அவர் வெளியில் கூற மறுத்துவிட்டார்.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே ட்ரம்ப் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார் என தெரியவந்துள்ளது. இந்த செய்தியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புளோரிடாவில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டதோடு  தடுப்பூசி போட்டுக் கொள்வதால் வழியேதும் இல்லை அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அதிபரின் முன்னாள் ஆலோசர் ஸ்டீபன் கூறியுள்ளார்.

Categories

Tech |