Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபு நடிக்கும் “பொம்மை நாயகி”…. வெளியான படத்தின் அப்டேட்….!!!!!

யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் பீஸ்ட், வலிமை, அயலான், வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் இவர் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார். அதன்படி தற்போது இவர் பொம்மை நாயகி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஷாம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரி கிருஷ்ணன், சுபத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு முழுக்க முழுக்க சீரியஸான வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.

Categories

Tech |