Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபு ஹீரோவான ”மண்டேலா”… தியேட்டர் வெளியீடு இல்லை…. படக்குழு திடீர் முடிவு …!!

யோகிபாபுவின் புதிய திரைப்படம் தொலைக்காட்சியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமுத்திரக்கனியின் புதுவித நடிப்பில் வெளிவந்த படம் ஏலே. இப்படத்தை ஹலிதா சமீம் என்பவர் இயக்கியுள்ளார்.  திரையரங்க உரிமையாளர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர்.

இந்நிலையில் ஏலே படத்தை தயாரித்த சசிகாந்த்தின் அடுத்த “மண்டேலா” என்ற படத்தையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் மார்ச் மாத கடைசியிலோ அல்லது ஏப்ரல் மாதத்திலோ ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |