Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை…. இன்ஜினியரிங் மாணவருக்கு குவியும் பாராட்டுகள்…!!

யோகா போட்டியில் தங்கபதக்கம் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் வீர மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொண்ட வீரமணிகண்டன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் வீர மணிகண்டன் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இதனை பாராட்டி விருதுநகர் அத்லடிக் கிளப் செயலாளர் மணிமாறன் பரிசு வழங்கி வீர மணிகண்டனை பாராட்டியுள்ளார். அப்போது மக்கள் நீதி மைய மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் உடனிருந்தார்.

Categories

Tech |