இந்தியாவில் கடந்த 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தில் 17 லட்சம் கர்ப்பிணிகள் பங்கேற்று உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
யோகா தினத்தை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி நாட்டில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களின் விவரங்களை நேற்று மத்திய அமைச்சகம் வெளியிட்டது. அதில் 42 லட்சத்து 28 ஆயிரத்து 802 குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். அதேபோல் 22 லட்சத்து 72 ஆயிரத்து 597 இளம்பருவத்தினர் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆச்சரியம் தரும் விஷயமாக 17 லட்சத்து 37 ஆயிரத்து 440 கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் கலந்துகொண்டுள்ளனர். இது மட்டுமில்லாமல் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்கள் யோகா செய்யும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ததாகவும், அதை பகிர்ந்து கொண்டதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.