சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக தளங்களில் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோகமுறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறி இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் இன்று உலக யோகா உலகளாவிய ஒத்துழைப்புக்கான அடிப்படையாக மாறி மனிதகுலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வு வழியாக விளங்குகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
யோகா என்பது இன்று வீடுகளையும் தாண்டி உலகம் முழுவதும் பரவி வருகிறதை காண்கிறோம். இது ஆன்மீக உணர்தல் அதிலும் குறிப்பாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொற்று பரவி வந்த கடந்த இரண்டு வருடங்களில் இயற்கையான மற்றும் பகிரப்பட்ட மனித உணர்வை வெளியேற்றியது யோகா என அவர் தெரிவித்துள்ளார். யோகா தற்போது உலகளாவிய திருவிழாவாக மாறிவிட்டது யோகா என்பது எந்த ஒரு தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. அது ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் உரியது. எனவேதான் இந்த முறை யோகா தினத்தில் கருப்பொருள் மனித குலத்திற்கான யோகா என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த கருப்பொருளை உலக அளவில் எடுத்து சென்றதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். யோகா நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லாமல் இன்று அது நமது வாழ்க்கையின் முறையாக மாறிவிட்டது என பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். நாம் எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும் சில நிமிட தியானம் நம்மை ஆசுவாசப்படுத்தி நமது உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது.
அதனால் யோகாவை கூடுதல் வேலையாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை நாம் யோகாவை அறிந்து கொள்ள வேண்டும். நாம் யோகாவை வாழ வேண்டும். மேலும் நான் யோகத்தை அடைய வேண்டும் யோகத்தை கடைப்பிடிக்க வேண்டும். நாம் யோகாவை வாழத் தொடங்கும்போது நாம் தினம் செய்ய வேண்டிய பயிற்சியாக அல்ல நமது ஆரோக்கியம் மகிழ்ச்சி மற்றும் அமைதியை கொண்டாடுவதற்கான ஒரு ஊடகமாக யோகா மாறுகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் ஆயுஸ் அமைச்சகத்தின் ஸ்டார்ட் யோகா சவால் பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் வருடத்திற்கான யோகா மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பிற்கான பிரதமர் விருதுகள் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய எல்லைகளை தாண்டி ஒருங்கிணைக்கும் யோகாவின் சக்தியை உணர்த்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்திய தூதரகங்களுடன் இணைந்து 79 நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டு யோகா முயற்சியான கார்டியன் யோகா எனும் அற்புதமான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பங்கேற்ற மைசூர் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 2015 முதல் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 26ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தில் கருப்பொருள் மனித குலத்திற்கான யோகா என்பது கொரோனா தொற்று நோய் காலகட்டத்தின் போது நமது வேதனையை போக்குவதற்காக யோகா மனித குலத்திற்கு எவ்வாறு சேவை செய்தது என்பதை இந்த வருட கருப்பொருள் சித்தரிக்கிறது.