Categories
மாநில செய்திகள்

யோகா, இயற்கை மருத்துவ படிப்பு…. விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) நடப்பு கல்வி ஆண்டிற்கான BNYS மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் இயக்குனராக அலுவலகத்திலோ அல்லது தேர்வு கூட அலுவலகத்திலோ அல்லது வேறு எங்கும் வழங்கப்படாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அக்டோபர் 19ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கடந்த மாத 27ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர் .தற்போது வருகின்ற 28ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |